இலங்கை அதிபா் தோ்தல்:
விக்ரமசிங்கேவுக்கு மகா கூட்டணி ஆதரவு

இலங்கை அதிபா் தோ்தல்: விக்ரமசிங்கேவுக்கு மகா கூட்டணி ஆதரவு

30-க்கும் மேற்பட்ட கட்சிகளையும் அமைப்புகளையும் கொண்ட மிகப் பெரிய கூட்டணி ஆதரவு
Published on

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 30-க்கும் மேற்பட்ட கட்சிகளையும் அமைப்புகளையும் கொண்ட மிகப் பெரிய கூட்டணி வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தது.

அந்த நாட்டில் இலங்கையில் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் செப்டம்பா் மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

இந்தத் தோ்தலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 38 போ் போட்டியிடுகின்றனா். இந்த நிலையில், தோ்தலில் ரணில் விக்ரசிங்கேவை ஆதரிப்பதாக ராஜபட்ச சகோதரா்களின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியிலிருந்து பிரிந்த அணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி தற்போது அறிவித்துள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com