அமெரிக்காவிற்கு சேவை செய்யத் தயார் : எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பின் அவர் நிர்வாகத்தில் இணைந்து அமெரிக்காவிற்கு சேவை செய்யத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப்
எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப்
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு பதவி அளிக்க விருப்பப்படுவதாக டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து ‘நான் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்’ என எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பிற்கு தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவளித்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப்பிடம் எலான் மஸ்க்கிற்கு அவருடைய ஆட்சியில் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப்
தலைமை வகிக்கத் தகுதியற்றோர்தான் ராணுவத்தை அவமதிப்பர்: ஜோ பைடன்!

இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப், தான் மறுபடியும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புகையில், தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தயாரென்றால், அமைச்சரவை உறுப்பினர் அல்லது ஆலோசகர் பதவி வழங்க விருப்பப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வழங்கப்படும் 7,500 அமெரிக்க டாலர் வரி சலுகையை நீக்குவது குறித்தும் சிந்திக்க இருப்பதாக டிரம்ப் கூறினார்.

இதற்கு சூசகமாகத் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் பதிலளித்த எலான் மஸ்க், நான் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்ப்பிற்கு ஆதரவாக புதிய அரசியல் செயல்பாட்டுக் குழு ஒன்றை அமைத்து மாதம் 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.376 கோடி) வரை செலவளிக்க எலான் மஸ்க் உறுதியளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்கட்சிகளின் வாக்காளர் அணுகுமுறை மற்றும் பிராசாரங்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் இந்தக் குழு கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com