ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவும் ஆன்லைன் விளையாட்டுகள்: ஆய்வில் தகவல்!

ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் சமூகத் திறன்கள் மேம்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டிசம் (கோப்புப் படம்)
ஆட்டிசம் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் சமூகத் திறன்கள் மேம்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள ப்ளைமவுத் பல்கலைக்கழகம் ஆட்டிசம் குறைபாடுள்ள 8 நபர்களை வைத்து நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களை டங்கன்ஸ் & டிராகன்ஸ் என்ற விளையாட்டை நேரடியாகவும், ஆன்லைனிலும் விளையாட வைத்துள்ளனர்.

ஆட்டிசம் தொடர்பான இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களை அவர்கள் சுமூகமாக உணரும் சமூக வெளியில் வைப்பது அவர்களது செயல்பாட்டினை மேம்படுத்துமா என்று ஆராய முயன்றனர்.

டங்கன்ஸ் & டிராகன்ஸ் ஆன்லைன் விளையாட்டு
டங்கன்ஸ் & டிராகன்ஸ் ஆன்லைன் விளையாட்டு

”ஆட்டிசம் பற்றி பல தவறான நம்பிக்கைகளும் கருத்துகளும் உள்ளன. ஆட்டிசம் பாதிப்படைந்தவர்கள் சமூக ரீதியாக முனைப்பற்றவர்கள், கற்பனை வளம் குறைந்தவர்கள் என பலரும் கூறுகின்றனர். டன்ஜன்ஸ் & டிராகன்ஸ் ஆன்லைன் விளையாட்டு இதற்கு முற்றிலும் மாறாக, அவர்களை முழுக்க கற்பனையானக் களத்தில், குழுவாக இணைந்து செயல்படுவதை மையமாகக் கொண்டு செயல்பட வைத்துள்ளது,” என்று பிளைமவுத் பல்கலைக்கழகத்தின் உளவியல் விரிவுரையாளர் டாக்டர். கிரே அதெர்டன் கூறினார்.

ஆட்டிசம் (கோப்புப் படம்)
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எதிர்நோக்கும் சவால்கள்..

விளையாட்டைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆறு வாரங்கள் சிறிய குழுவாக விளையாடும்படி ஒருவரின் கண்காணிப்பில் விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் பின்னர் அவர்களுடன் ஒரே நேரத்தில் நேர்காணல் நடத்தி, ஆட்டிசம் அவர்களின் அனுபவங்களை எவ்வாறு பாதித்தது என்றும், இந்த விளையாட்டின் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதா என்று அவர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.

விளையாட்டில் ஈடுபட்டவர்கள் ஆட்டிசத்தால் ஏற்படும் பாதிப்புகள் சில நேரங்களில் குறைந்து காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

ஆட்டிசம் (கோப்புப் படம்)
ஆப்கனில் குற்றங்கள் 30 சதவீதம் குறைந்துள்ளன: ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம்!

மேலும், விளையாட்டில் ஈடுபடும்போது மற்றவர்களுடன் இயல்பாகப் பழக முடிந்ததாகவும், நெருக்கமாக உணரும் சூழல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தங்கள் ஆளுமையின் பண்புகளை விளையாட்டிற்கு வெளியே பயன்படுத்தும் நம்பிக்கை ஏற்பட்டு, சுய உணர்வில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

எங்கள் ஆய்வில் பங்கேற்றவர்கள் இந்த விளையாட்டை புத்துணர்ச்சியாக, ஒரு மாறுபட்ட ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவும், சவாலான அனுபவங்களைப் பகிர்வதற்கான வாய்ப்பாகவும் பார்த்தனர். தங்களின் உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்களால், அவர்களில் பலரும் தினசரி வாழ்வில் அதனைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்” என்று அதர்டன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com