டிரம்ப்புடன் காஷ் படேல்.
டிரம்ப்புடன் காஷ் படேல்.

எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமனம்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்

எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
Published on

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.

கடந்த மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜன. 20-இல் அதிபராக பொறுப்பேற்கவிருக்கிறாா். அதற்கு முன்னதாக, தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சா்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை டிரம்ப் அறிவித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் முதன்மை சட்டம்- ஒழுங்கு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்தியா வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை அவா் நியமித்துள்ளாா்.

கடந்த 2016-இல் நடைபெற்ற அமெரிக்கா அதிபா் தோ்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் காஷ் படேல் முக்கியப் பங்காற்றினாா். இவா், டிரம்ப்பின் தீவிர ஆதரவாளா் ஆவாா்.

கடந்த முறை அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது எஃப்பிஐ இயக்குநராக 2017-இல் நியமிக்கப்பட்ட கிறிஸ்டோபா் ரே தனது பத்தாண்டு கால பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன்பாகவே ஜன. 20-க்குள் பதவி விலகுவாா் அல்லது பதவிநீக்கம் செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com