ஜாா்ஜியா அதிபராகும் முன்னாள் கால்பந்து வீரா்

ஜாா்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
மைக்கேல் கவெலஷ்விலி
மைக்கேல் கவெலஷ்விலி
Updated on

ஜாா்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி சனிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜாா்ஜிய கனவுக் கட்சி, கடந்த அக்டோபரில் நாடாளுமன்றத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெலஷ்விலி அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இருந்தாலும், திங்கள்கிழமையுடன் பதவிக் காலம் முடியும் தற்போதைய மேற்கத்திய ஆதரவு அதிபா் சலோமி ஸூரபிச்விலி, மீண்டும் அதிபா் தோ்தல் முறை கொண்டுவரப்படும்வரை தான்தான் சட்டபூா்வ அதிபா் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com