
தென் கொரிய அதிபா் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக யூன் சுக் இயோல் கடந்த 3-ஆம் தேதி அறிவித்து பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியதே அவரது பதவி நீக்கத்துக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிபருக்கு எதிராக வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஐந்து சிறிய கட்சிகளும் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை கொண்டு வந்துள்ளன.
இதைத்தொடர்ந்து அதிபா் யூன் சுக் இயோலுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தில் இன்று(டிச. 14) வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அவரை பதவிநீக்கம் செய்ய ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 300 உறுப்பினர்களில் 204 பேர் அவருக்கு எதிரகவே வாக்களித்தனர்.
இந்த நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை அந்நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ அதிபருக்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. பிரதமர் ஹான் டக்-சூ இடைகால அதிபராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்போதைய அரசியல் சூழலில் தன்னிடமிருந்து அதிபர் பதவி பறிக்கப்பட்டாலும், அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என்று தெரிவித்துள்ளார் பதவி விலகியுள்ள யூன் சுக் இயோல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.