ஜார்ஜியா: உணவகத்தில் விஷ வாயு கசிவு -11 இந்தியர்கள் பலி!
ஜார்ஜியாவில் இயங்கி வரும் இந்திய உணவகம் ஒன்றில் கார்பன் மோனாக்சைட் வாயு கசிந்து விபத்து நேர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடாவ்ரி பகுதியிலுள்ள மலை வாசஸ்தல உணவகத்தில் நிகழ்ந்துள்ள விபத்தில் அங்கிருந்த இந்தியர்கள் 11 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலிசியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து அளித்துள்ள தகவலின்படி, விபத்தில் உயிரிழந்த 11 பேரும் மேற்கண்ட உணவகத்தில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்திய தூதராகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜார்ஜியாவின் குடாவ்ரியில் 11 இந்தியர்கள் பலியான சம்பவம் வருத்தமளிப்பதாகவும், பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் உடல்களை தாயகம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் தொடர்பிலிருப்பதாகவும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.