
பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று(டிச.17) காலை ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி பேரலைகள் ஏற்பட்டிருப்பதாக சுனாமி சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சுமார் 1 மீட்டர் (3 அடி) உயரத்துக்கும் அலைகள் எழும்பியதால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.