அரிய நோயால் பாதிக்கப்பட்ட 19 வயது டிக்-டாக் பிரபலம் மரணம்!

அரியவகை நோய் தாக்கி 19 வயது டிக்-டாக் பிரபலம் மரணமடைந்தார்.
பியென்றி பூய்சென்
பியென்றி பூய்சென்
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் அரியவகை நோய் தாக்கி மரணமடைந்தார்.

19 வயதான டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் மிகவும் அரிதான ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் என்ற மரபணு குறைபாட்டல் ஏற்படக்கூடிய புரோஜீரியா என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் புதன்கிழமை மரணமடைந்ததாக அவரது தாயார் பி.பூய்சென் முகநூல் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ தென்னாப்பிரிக்காவின் பிரபலமான, அனைவருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய இளம்பெண்களில் ஒருவரான பியென்றி காலமானதை ஆழந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

‘பா(Paa)’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்
‘பா(Paa)’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்

பியென்றி உத்வேகமான பெண் மட்டுமல்ல, புரோஜீரியா நோயால் பாதிக்கப்பட்ட கடைசி பெண்ணாகவும் பார்க்கப்பட்டார். இந்த அரிவகை நோயால் பாதிக்கப்பட்டது போன்று ஹிந்தி திரைப்படமான ‘பா(Paa)’ திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருப்பார்.

டிக்-டாக்கில் பிரபலமான பியென்றி மொத்தமாக 2,69,200 ஃபாலோவர்களை கொண்டிருந்தார். அவரது இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அவரின் மரணம் டிக்-டாக் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புரோஜீரியா நோயின் அறிகுறி என்ன?

புரோஜீரியா நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும் போதும் சாதாரணமாக இருந்தாலும், அவர்களின் மூளையை பாதித்து எளிதில் உடையக்கூடிய எலும்புகள், இருதய நோய்கள், விரைவான முதுமை, தோல் சுருக்கம், முடி உதிர்தல், குறைந்த உயரம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com