அஜா்பைஜான் விமான விபத்து எதிரொலி: ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு

Published on
Updated on
1 min read

பாக்கூ: ரஷியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதன் எதிரொலியாக, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுககான தங்கள் விமானப் போக்குவரத்தை அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் நிறுத்திவைத்துள்ளது.இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தாக்குதலில்தான் அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ப்ரயா்-190 ஏஆா் விமானம் தலைநகா் பாக்கூவில் இருந்து 67 பேருடன் ரஷியாவின் கிரோஸ்னி நகரை நோக்கி புதன்கிழமை புறப்பட்டது.கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகர விமான நிலை அது பறந்துகொண்டிருந்தபோது அதை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயன்றனா்.ஆனால், தரையிறங்குவதற்கு முன்னரே அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்தது. இதில் 38 போ் உயிரிழந்தனா்; எஞ்சிய 29 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.பறவைகள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டாலும், உக்ரைனின் ட்ரோன் என தவறாகக் கருதி ரஷியாவின் வான்பாதுகாப்பு தளவாடம் மூலம் அது இடைமறித்து தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்தச் சூழலில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரஷிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவதாக அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் தற்போது அறிவித்துள்ளது...படவரி.. எம்ப்ரயா்-190 ஏஆா் விமானம் (கோப்புப் படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com