கென்யாவில் பெரும் வெடிப்பு: 3 பேர் பலி, பலர் காயம்

தலைநகரின் அருகில் ஏற்பட்ட இந்த வெடிப்பு, வீடுகள் மற்றும் கிடங்குகளைத் தீக்கு இரையாக்கியுள்ளது.
தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு படையினர்| AP
தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு படையினர்| AP

நைரோபி: கென்யாவின் தலைநகரில் எரிவாயு ஏற்றப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் சுற்றுப்புற வீடுகள் மற்றும் கிடங்குகள் தீப்பற்றின.

இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 270-க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும்.

எரிவாயு டிரக் | AP
எரிவாயு டிரக் | AP

மிராடி என்கிற பகுதில் பின்னிரவு நேரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. டிரக்கின் எரிவாயு நிரம்பிய ஷெல்கள் பறந்து சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் தீக்கு இரையாகின.

இரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்துள்ளனர்.

விபத்தில் பெரும் தீ உருவாகியது. மேலும் அருகில் இருந்த ஆயுத்த ஆடைகள் கிடங்கில் தீப்பற்றியது. 

வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி மக்கள் | AP
வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி மக்கள் | AP

அரசு மற்றும் செம்பிறை சங்கம், மருத்துவமனைகளில் 271 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளன. இதுவரை 3 பேர் இறந்ததுள்ளனர். இந்த எண்ணிக்கை மீட்பு பணிகளில் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

குடியிருப்புகளுக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைந்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுகொண்டு இதனை அனுமதித்ததாக விமர்சனங்கள் எழுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com