
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராஃபிட்டி எனப்படும் சுவர் சித்திரெழுத்து பரவலாக உள்ளது. இந்த கலைஞர்கள் அடிக்கடி சட்ட விரோதமாக கட்டடங்களில் கிராஃபிட்டியை வரைந்து செல்கிறார்கள்.
இந்த முறை, வருகிற ஞாயிற்றுக்கிழமை கிராமி விருதுகள் நிகழ்வு நடைபெறவிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட 30 மாடி கட்டடத்தைத் தங்கள் கைவண்ணத்தால் அலங்கரித்துள்ளனர். காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
2019-ல் கைவிடப்பட்ட, பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தின் 27-வது மாடி வரை சுவர் சித்திரெழுத்தைக் காண முடிகிறது.
இவை விரைவில் நீக்கப்படும் எனவும் மேலும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மலேசியா: முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை குறைப்பு
இரவு 12.43 மணிக்கு அத்துமீறி நுழைந்த குழுவினரை காவல் ஹெலிகாப்டர் பார்த்ததாகவும் அவர்கள் இந்த வேலையைச் செய்திருப்பதாக சந்தேகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.