வரலாறு காணாத காட்டுத்தீ: 46 பேர் பலி

மத்திய சிலியில் உருவாகியுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
தீ பரவும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்| AP
தீ பரவும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்| AP

சிலியில் கடுமையான காட்டுத்தீ, அதிக மக்கள் திரள் உள்ள பகுதிகளில் பரவி வருகிறது. குறைந்தது 46 பேர் இதில் பலியாகியதாக சிலி பிரதமர் தெரிவித்துள்ளார். 1,100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின.

அமெரிக்கா நாடான சிலியின் பிரதமர் கேப்ரியல் போரிக் பேசும்போது, வல்பரைஸோ மாகாணத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் சவாலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்டடத்தின் முகப்பில் தீயை அணைக்கும் மீட்பு வீரர்கள் | AP
கட்டடத்தின் முகப்பில் தீயை அணைக்கும் மீட்பு வீரர்கள் | AP

92 இடங்களில் தீ அணையாமல் உள்ளது, ஏறத்தாழ 43 ஆயிரம் ஹெக்டர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாதகமான வானிலை இருப்பதால் தீ பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தீக்கு இரையான கார்கள் | AP
தீக்கு இரையான கார்கள் | AP

மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணி தொடர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார்.

19 ஹெலிகாப்டர்கள், 450 மீட்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ என அழைக்கப்படுகிற வானிலை மாற்றத்தின் காரணமாக கடும் வறட்சியும் அதனால் எப்போதையும் விட கூடுதல் வெப்பநிலையும் காட்டுத்தீக்கு காரணமாக உள்ளது. ஜனவரியில் கொலம்பியாவில் 17 ஆயிரம் ஹெக்டர் காடு தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com