பாக்.: காவல்நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் 10 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் காவல்நிலையத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் 10 பேர் உயிரிழந்தனர்.
பாக்.: காவல்நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் 10 பேர் உயிரிழப்பு


இஸ்லாமாபாத் : வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்திலுள்ள சோட்வான் காவல்நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் நடத்தினர்.

காவல்நிலைய பகுதியை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காவல்துறையினர் 10 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.   

இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், தொடர்ந்து இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com