வட கொரியாவுக்குச் சென்ற முதல் வெளிநாட்டு பயணிகள்: யார்?

நான்கு வருடங்களுக்குப் பிறகு வட கொரியா முதன்முறையாக பயணிகளை வரவேற்றுள்ளது.
வட கொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகள் | AP
வட கொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகள் | AP

கரோனா பெருந்தொற்று காலம் தொடங்கி தனது எல்லைகளை வெளிநாட்டு பயணிகளுக்காக திறக்காதிருந்த வட கொரியா முதன்முறையாக பயணிகளை வரவேற்றுள்ளது.

ரஷியாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் வட கொரியாவின் தலைநகரை வெள்ளிக்கிழமை அடைந்துள்ளனர். 

இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த செப்டம்பர் சந்திப்புக்குப் பிறகு இந்த பயணம் சாத்தியமாகியுள்ளது.

வட கொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகள் | AP
வட கொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகள் | AP

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ரஷியர்களால் செல்ல முடியாத நிலை ரஷியா- உக்ரைன் போரால் உருவானது. அக்டோபரில் ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், வடகொரியாவைச் சுற்றுலாவுக்கான தளமாக பரிந்துரைத்தார்.

தென்கொரிய அரசு, வடகொரிய அரசு ஊடகம் கோவிட்-19க்குப் பிறகு எந்த சுற்றுலா பயணிகளையும் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

வடகொரிய தலைநகர் பியோங்யாங் சென்றுள்ள பயணிகளில் சுற்றுலா சென்றவர்களும் வடகொரியாவில் சிறப்பு பெற்ற பனிச்சறுக்கு மீதான ஆர்வத்தால் சென்றவர்களும் உள்ளதாக சுற்றுலா ஏற்பாடு செய்த முகவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகள் | AP
வட கொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகள் | AP

சீனா, வட கொரியாவின் சுற்றுலா துறைக்கு வருவாய்க்கு பெருமளவில் பங்காற்றிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவில் இருந்து பயணிகள் அல்லாமல் ரஷியாவுக்கு அனுமதி அளித்துள்ள கொரியாவின் இந்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வடகொரியா மற்றும் ரஷியா ஆயுதங்கள் சார்ந்து பரஸ்பரம் உதவிக் கொள்வதாகவும் அவர்கள் கணிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com