புதிய செய்யறிவு மூலம் மீண்டும் முதலிடம் பிடிக்கும் ஓப்பன் ஏஐ!

ஓப்பன் ஏஐ நிறுவனம் தனது புதிய சோரா தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சோரா உருவாக்கிய தத்ரூபக் காணொலி | Openai\Sora
சோரா உருவாக்கிய தத்ரூபக் காணொலி | Openai\Sora

ஓப்பன் ஏஐ (Open ai) நிறுவனம் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு செய்யறிவு தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் மாற்றத்தை, ஊக்கத்தை கொண்டு வந்த நிறுவனம் ஓப்பன் ஏஐ எனலாம். அந்நிறுவனத்தின் சாட் ஜிபிடி (Chat GPT) எனும் செய்யறிவு தொழில்நுட்பம் மொத்த உலகையும் அடுத்த படிக்கு தூக்கிவிட்டது.

எப்படியோ இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்த பல முன்னணி நிறுவனங்கள், தங்கள் செய்யறிவுகளை திடீர் திடீரென களமிறக்கி அதிர்ச்சியடைய வைத்தன. கூகுளாக இருக்கட்டும், எலான் மஸ்க்காக இருக்கட்டும், ஓப்பன் ஏஐ களமிறங்கிய பின்னரே களத்தை எட்டிப்பார்த்தனர். அதுவரை அனைத்து நிறுவனங்களும் நிதானமாகவே இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்தனர்.

உண்மையில், ஓப்பன் ஏஐ-க்கு போட்டியாக உள்ளே நுழைந்த பல நிறுவனங்கள் சாட் ஜிபிடி-யை விட வலிமையான பல செய்யறிவுகளை அறிமுகப்படுத்தின. கொஞ்ச காலம் ஓப்பன் ஏஐ காணாமல் போயிருந்தது என்றே சொல்லலாம்.

தற்போது புதிய அப்டேட்டோடு வந்திருக்கும் ஓப்பன் ஏஐ, அனைத்து நிறுவனங்களைப் பார்த்து பரிதாபமாக சிரிக்கும் வகையில் தனது சோரா (Sora) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எழுத்துக் கட்டளைகள் மூலம் காணொலிகளை உருவாக்கும் (Text command to Video) பல செய்யறிவுகளுக்கு மத்தியில் தலைவனாக நிற்கிறது சோரா. சோரா உருவாக்கும் காணொலிகள் வலைதளத்தை வாயடைக்க வைத்துள்ளன.

சோரா உருவாக்கிய காணொலி | Openai\Sora
சோரா உருவாக்கிய காணொலி | Openai\Sora

வார்த்தைகளால் எப்படிப்பட்ட காணொலிகள் வேண்டும் என விவரித்தால் போதும், அது அனிமேசனோ, அல்லது உண்மையான காட்சிகளோ மிகக் கச்சிதமாக உருவாக்கப்படுகிறது.

ஓப்பன் ஏஐ-யை கஷ்ட்டப்பட்டு பின்னுக்குத் தள்ளி முன்னேறிய மற்ற நிறுவனங்கள் எல்லாம் இப்போது மீண்டும் கடைசி வரிசையில் நிற்கின்றன. சோராவின் காணொலிகள் மிகவும் துள்ளியமாகவும், கச்சிதமாகவும் உருவாக்குவதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சோராவில் உருவாக்கப்பட்ட காணொலி | Openai\Sora
சோராவில் உருவாக்கப்பட்ட காணொலி | Openai\Sora

தற்போது சாட் ஜிபிடியைப் போல பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சோரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட கலைஞர்களுக்கும், நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை சோதனையோட்டமாக வழங்கியுள்ளதாக ஓப்பன் ஏஐ தெரிவித்துள்ளது. சோரா மூலம் உருவாக்கிய காணொலிகளை வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com