உலகம்
காஸா: குண்டுவீச்சில் மேலும் 64 போ் மரணம்
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா்.
அதையடுத்து, அந்தப் பகுதியில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29,313-ஆக அதிகரித்துள்ளது.
தாக்குதலில் இதுவரை 69,333 -க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.