டெய்லர் ஸ்விப்டுக்காக சண்டையிடும் நாடுகள்!

சிங்கப்பூரில் டெய்லர் ஸ்விப்ட் இசை விழா - பிரம்மாண்ட நிகழ்வுக்கான ஏற்பாடுகள்
டெய்லர் ஸ்விப்டுக்காக சண்டையிடும் நாடுகள்!
Evan Agostini

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. பிரச்னை அது அல்ல. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூரில் மட்டுமே டெய்லர் இசை நிகழ்வு நடைபெற வேண்டும் என்கிற ஒப்பந்தத்தோடு சிங்கப்பூர் அரசு மானியம் வழங்கியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு தொடர் நிகழ்வுகளாக ஜப்பான், ஆஸ்திரேலியா அடுத்து சிங்கப்பூரில் தனது இசை நிகழ்வுகளை நடத்தி வருகிறார் டெய்லர்.

சிங்கப்பூர் நேஷனல் ஸ்டேடியத்தில் மார்ச் மார்ச் 2 முதல் 9 வரையிலான நாள்களில் ஆறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

3 லடசத்துக்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்கள்.

சிங்கப்பூர் அரசு டெய்லரின் நிகழ்வொன்றுக்கு மானியமாக 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் அளிப்பதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறியுள்ளார்.

டெய்லர் ஸ்விப்ட்
டெய்லர் ஸ்விப்ட்AP

பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோய் சல்செடா, நல்ல அண்டை நாடுகள் செய்யக் கூடிய காரியமன்று இது என விமர்சித்துள்ளதாக செளத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் இந்தோனேஷியாவின் சுற்றுலா துறை அமைச்சர் சாண்டியகோ யூனோவும், ஸ்விப்ட் தங்கள் நாட்டில் வந்து நிகழ்வு நடத்த ஆர்வம் காட்டியுள்ளார்.

இவற்றுக்கு எல்லாம் காரணம் டெய்லர் கால் பட்ட இடமெல்லம் பொன்னாகும் என்பதைத் தான் சமீபத்திய ஆண்டுகளில் அவரது இசை நிகழ்வுகள் காட்டிவருகின்றன.

டெய்லரின் கடந்த ஆண்டு எராஸ் டூர் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்த உதவியது.

சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வையொட்டி அங்குள்ள விடுதிகளின் கட்டணம் 10 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. விமானங்களின் தேவை அதிகரித்துள்ளது.

ஸ்விப்ட் புயல் தங்கள் நாட்டு பொருளாதாரத்திலும் ஒரு அசைவை உருவாக்கும் என நாடுகள் கருதுகின்றன.

டெய்லர் ஸ்விப்டுக்காக சண்டையிடும் நாடுகள்!
டெய்லர் ஸ்விப்ட் தந்தை மீது புகார்: என்ன செய்தார்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com