டெய்லர் ஸ்விப்ட் தந்தை மீது புகார்: என்ன செய்தார்?
புகைப்படக்காரரை தாக்கிய டெய்லர் ஸ்விப்டின் தந்தை மீது புகார்

டெய்லர் ஸ்விப்ட்
AP

டெய்லர் ஸ்விப்ட்
AP
பாடகி டெய்லர் ஸ்விப்டின் தந்தை தன்னைத் தாக்கியதாக புகைப்படக்காரர் ஒருவர் காவலர்களிடம் புகார் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி டெய்லரின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 6 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர்.
இசை நிகழ்வுக்காக பங்கேற்பதாக சிட்னி வந்திருந்த டெய்லர் ஸ்விப்ட் நியூட்ரல் வளைகுடா பகுதியில் படகில் இருந்து கரையை நோக்கி வந்தபோது அவரைக் காண காத்திருந்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
டெய்லர் ஸ்விப்ட் காரை அடைவதற்கு முன்பு அவருடன் வந்த பாதுகாவலர் ஒருவர் குடையைக் கொண்டு புகைப்படக்காரர்களைத் தள்ளியதாகவும் சிறிது நேரத்தில் ஒருவர் மீண்டும் வந்து தன்னைத் தாக்கியதாகவும் பின்னர் தாக்கிய நபர் டெய்லரின் தந்தை ஸ்காட் ஸ்விப்ட் என்பதை அறிந்ததாகவும் பென் மெக்டொனல்ட் என்கிற புகைப்படக்காரர் தெரிவித்துள்ளார்.
டெய்லரின் செய்தித் தொடர்பாளர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த சலசலப்புக்கு அங்கிருந்த செய்தியாளர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
71 வயதான டெய்லரின் தந்தை ஸ்காட் ஸ்விப்ட், 51 வயதான புகைப்படக்காரரைத் தாக்கிய விவகாரம் குறித்து சிட்னி காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...