ஈரானில் குண்டுவெடிப்பு: 73 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்!

ஈரானில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஈரானில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின்  ராணுவ ஜெனரல் காஸிம் சுலைமானிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (ஜன.3) நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் கெர்மானில் உள்ள அவரது கல்லறைக்கு அருகில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்த காசிம் சுலைமானி ஜனவரி 2020ல் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com