ஈரான் இரட்டை வெடிகுண்டு தாக்குதல், பலி எண்ணிக்கை உயர்வு!

ஈரானில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. 
வெடிகுண்டு தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்ட காட்சி | PTI
வெடிகுண்டு தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்ட காட்சி | PTI
Published on
Updated on
1 min read

ஈரானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. 

இந்தத் தாக்குதலில் காயப்பட்டிருந்த 8 வயது சிறுவன் மற்றும் 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நாட்டின் அவசர சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 102 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அதில் 11 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கில் 820 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. தற்கொலைப் படையால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதல் வெடிகுண்டு வெடித்த பின்னர், மீட்புப்பணிக்காக பணியாளர்களும் மக்களும் அங்கு கூட, 20 நிமிட இடைவெளியில் மற்றொரு குண்டும் வெடிக்கவைக்கப்பட்டு பெறும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக 11 பேரை இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com