மீண்டும் வட கொரியா எறிகணை சோதனை: தென் கொரியா குற்றச்சாட்டு

இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்கு அருகே வட கொரியா மீண்டும் எறிகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 
வட கொரியா எறிகணை சோதனை
வட கொரியா எறிகணை சோதனை

இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்கு அருகே வட கொரியா மீண்டும் எறிகணை சோதனையை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 

தங்கள் எல்லையையொட்டி வட கொரியா வீசிய நூற்றுக்கணக்கான எறிகணைகளுக்குப் பதிலடியாக, தென் கொரியாவும் வெள்ளிக்கிழமை எறிகணைவீச்சில் ஈடுபட்ட நிலையில், இன்று மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை வடகொரியா நடத்தியிருப்பது, கொரிய கடற்பரப்பில் போர் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், தென் கொரியாவின் மேற்கு கடல் எல்லையையொட்டி, வட கொரியா சுமாா் 200 எறிகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டது. இது, பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான செயலாகும் என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சுமாா் ஓராண்டுக்குப் பிறகு, இத்தகைய எறிகணை சோதனையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வட கொரியா ஈடுபட்டுள்ளது

வட கொரியாவின் இந்த சோதனைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, தென் கொரியாவும் இரண்டு எல்லைத் தீவுகளில் இருந்தபடி வட கொரிய எல்லை அருகே எறிகணைகளை சரிமாரியாக கடலுக்குள் வீசி சோதித்தது.

எனினும், இந்தச் சோதனை தொடா்பாக வட கொரியா இதுவரை எந்தக் கருத்தையும் வெளிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com