கண்ணாடி வடிவில் தொலைக்காட்சி, எல்ஜி-யின் புதிய தொழில்நுட்பம்!

பார்ப்பதற்கு கண்ணாடியைப் போல இருக்கும் தொலைக்காட்சியை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எல்ஜி அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொலைக்காட்சி | LG
எல்ஜி அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொலைக்காட்சி | LG

உலகின் முதல் கம்பியிணைப்பற்ற கண்ணாடி போன்ற தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

டிரான்ஸ்பரண்ட் ஓஎல்இடி சிக்னேஜ் (Transparent OLED Signage) எனும் இந்தத் தொலைக்காட்சி சராசரியான தொலைகாட்சியைப் போலல்லாமல், அதன் திரை, ஒளி ஊடுருவும் கண்ணாடிகளைக் கொண்டுள்ளது.  

அதாவது, இந்த தொலைக்காட்சியின் பின்னால் உள்ள பொருள்களையும் உங்களால் திரையில் காணமுடியும் என்கிறது எல்ஜி நிறுவனம். உதாரணமாக கார் கண்ணாடியில் இந்த தொழில்நுட்பத்தைப் பொறுத்தினால், சாலை மற்றும் காணொலி இரண்டையும் கார் கண்ணாடியில் பார்க்கலாம். 

நடக்கவிருக்கும் சிஇஎஸ் 2024-ல் தனது புதிய தொலைக்காட்சியைக் காட்சிப்படுத்தவுள்ளதாக எல்ஜி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் தனது புதிய தொழில்நுட்பத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தொலைக்காட்சி 38% ஒளி ஊடுருவும் திறன் (transparency) கொண்டது என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தொலைக்காட்சிக்கு கம்பியிணைப்புகள் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சியுடன் வழங்கப்படும் சீரோ கனெக்ட் பாக்ஸ் (Zero Connect Box) மூலம் காணொலிகள் மற்றும் ஒலிகள் பரிமாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னால் இருக்கும் பொருள்களுடன் திரையில் தெரியும் படம் | LG
பின்னால் இருக்கும் பொருள்களுடன் திரையில் தெரியும் படம் | LG

கண்ணாடி போல செயல்படும் இந்தத் திரையை சாதாரண திரைபோலவும் மாற்றிக்கொள்ளும் வசதி இந்தத் தொலைக்காட்சியில் உள்ளது. 

இந்தத் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை விட 70% அதிக காணொலி கிராபிக்ஸ் திறனையும், 30% அதிக செயல்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

எப்போது சந்தைக்கு வரும்? ஆரம்ப விலை? போன்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com