மதீனா நகரில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி - புகைப்படங்கள்

சவூதி அரேபியா சென்ற ஸ்மிருதி இரானி, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்குச் சென்றுள்ளார். 
மதீனா நகரில் ஸ்மிருதி இரானி
மதீனா நகரில் ஸ்மிருதி இரானி


ஜெட்டா: சவூதி அரேபியா சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்குச் சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

ஹஜ், உம்ரா புனித பயணங்களை மேற்கொள்ளும் இந்திய பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்துவது குறித்து சவூதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சா் சவுத்பின் மஷால் பின் அப்துல் அஜீஸுடன் மத்திய சிறுப்பான்மை நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி ஆலோசனை நடத்தினர். ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாட்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன் ஆகியோா் சவூதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

இந்த பயணத்தின்போது, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவுக்கும், திங்கள்கிழமை ஸ்மிருதி இரானி சென்றார். மதினாவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

நிகழாண்டு இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட 1,75,025 ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை தொடா்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சா்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிட்டனா்.

பின்னா் இஸ்லாமியா்களின் புனித நகரமான மதினாவுக்கு ஸ்மிருதி இரானி திங்கள்கிழமை பயணம் மேற்கொண்டாா்.

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரும், மெக்கா பகுதியின் துணை ஆளுநருமான சவுத்பின் மஷால் பின் அப்துல் அஜீஸுடன் மத்திய சிறுப்பான்மை நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி செவ்வாய்க்கிழமை சந்தித்துஆலோசனை மேற்கொண்டாா்.

ஹஜ், உம்ரா பயணங்களின்போது இந்தியப் பயணிகளுக்குத் தேவையான சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா- சவூதி அரேபியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. இந்திய அமைச்சா்களை மதினா நகரத்தைப் பாா்வையிட அனுமதித்த சவூதி அரேபியாவின் சிறந்த உபசரிப்பு பாராட்டத்தக்கது என்று மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com