கப்பல்கள் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்: செங்கடலில் நடப்பது என்ன?

ஈரான் ஆதரவு புரட்சி இயக்கமான ஹெளதி அமைப்பு செங்கடல் பகுதியில் தொடர்தாக்குதல் நடத்திவருகிறது. 
அமெரிக்க ராணுவத்தின் கப்பல் | AP
அமெரிக்க ராணுவத்தின் கப்பல் | AP
Published on
Updated on
1 min read

யேமனை நாட்டைச் சேர்ந்த ஹெளதி அமைப்பு, செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது இதுவரை இல்லாதளவில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்க கப்பல்கள் கணைகளை இடைமறித்து தாக்கின. இதுவரை எந்தவித சேதாரமும் தெரிவிக்கப்படவில்லை.

ஈரான் ஆதரவு புரட்சி இயக்கமான ஹெளதி அமைப்பு செங்கடலில் நடத்துகிற தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து உடனடி நிறுத்தத்தைக் கோரும் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இந்த நிலையில் ஹெளதி நடத்தியுள்ள தாக்குதல், கப்பல்களின் போக்குவரத்தைத் தாமதப்படுத்துவதுடன் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

யேமன் துறைமுகங்களான ஹோடீடா மற்றும் மோக்கா பகுதிகளில், ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தனியார் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. 

தாக்குதலை பிரிட்டன் கடற்படையும் உறுதிசெய்துள்ளது. அமெரிக்கா ராணுவ கட்டுப்பாட்டகம், ஹெளதிகளால் ஏவப்பட்ட 18 டிரோன்கள், 2 ஏவுகணைகள் மற்றும் கப்பல் தாக்கி அழிக்கும் கணைகள் தடுக்கப்பட்டதாகத்  தெரிவித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு அமைந்த, பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசை எதிர்த்து உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் அமைப்பான ஹெளதி அமைப்பு, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தரை மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தக் கோரி இந்தத் தாக்குதல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com