இஸ்ரேலிய கால்பந்தாட்ட வீரரை வெளியேற்றிய துருக்கி: காரணம் என்ன?

துருக்கி கால்பந்தாட்ட அணியில் இருந்து இஸ்ரேல் வீரர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சாகிவ் ஜெஹெஸ்கேல் (சிவப்பு சீருடையில் இருப்பவர்) | AP
சாகிவ் ஜெஹெஸ்கேல் (சிவப்பு சீருடையில் இருப்பவர்) | AP

துருக்கிய அதிகாரிகள் இஸ்ரேலிய கால்பந்தாட்ட வீரரை வெறுப்பைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டி போட்டிகளில் இருந்து தடை செய்துள்ளனர்.

லீக் விளையாட்டில் கலந்துகொண்ட துருக்கிய கால்பந்தாட்ட குழுவான ஆண்டலியாஸ்போர் அணியின் வீரர் சாகிவ் ஜெஹெஸ்கேல் விளையாட்டின்போது கையில் அணிந்திருந்த கச்சை சர்ச்சைக்குள்ளானது.

அவரது கை மணிக்கட்டில் அணிந்திருந்த கச்சையில் ”100 நாள்கள் 10.7” என எழுதப்பட்டிருந்தது.

அக்.7 ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாள்களாக நடந்துவருவதை இது குறிக்கிறது.

வெளிப்படையாக பொதுமக்களிடையே வெறுப்பு மற்றும் விரோதத்தைப் பரப்பும்வகையில் நடந்துகொண்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக துருக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாகிவ், “நான் போருக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. 100 நாள்களாகத் தொடரும் போர் நடவடிக்கை இறுதி பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆண்டலியாஸ்போர் அணி நிர்வாகம், சாகிவ்-ஐ நீக்கம் செய்ததுடன் அவருடனான் ஒப்பந்த முறிவுக்கான நடவடிக்கையையும் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சாகிவ் மீதான தடை, இஸ்ரேலில் கோபத்தை உண்டாக்கியுள்ளது. இஸ்ரேl முன்னாள் பிரதமர் நஃப்டாலி பேனட் தனது எக்ஸ் பக்கத்தில் துருக்கிய அரசை விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com