இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கும் தர்பூசணிக்கும் என்ன தொடர்பு?

பாலஸ்தீன ஆதரவு பதாகைகளில் இடம்பெறும் தர்பூசணி குறிப்பது என்ன?
பிலிப்பைன்ஸ் போராட்டம் | AP
பிலிப்பைன்ஸ் போராட்டம் | AP

கடந்த 3 மாதங்களாக பதாகைகளிலும் போராட்டக்காரர்கள் அணிந்திருக்கும் டி-சர்ட்களிலும் பலூன்களிலும் சமூக வலைதளங்களிலும் தர்பூசணி எமோஜி இடம்பெற்று வருகிறது. 

வெட்டப்பட்ட தர்பூசணியின் முக்கோண வடிவிலான எமோஜி இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் குறிப்பதற்கு ஆதரவாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

சமூக வலைதளப் பயன்பாடு மிகுந்த காலத்தில் அவற்றில் பதிவிடப்படுகிறவற்றை அந்தந்த வலைதள நிறுவனங்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றன. அவை தடை செய்கிற வார்த்தைகள் கொண்ட பதிவுகள் மற்றவர்களுக்கு காண்பிக்கப்படாது அல்லது குறைவாக கொண்டு சேர்க்கப்படும். இந்த நிரலை (அல்காரிதம்) முறியடிக்க தர்பூசணி எமோஜியை ஆதரவாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பாலஸ்தீன கொடியில் உள்ள நிறங்கள் இந்த தர்பூசணியிலும் உள்ளது. சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு ஆகியவை முறையே தர்பூசணியின் மையப்பகுதி, வெளிப்புறம், விதைகள் ஆகியவற்றில் தென்படுகிறது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் தர்பூசணி அச்சடித்த பதாகைகள் | AP
பாகிஸ்தானில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் தர்பூசணி அச்சடித்த பதாகைகள் | AP

வரலாறு

தர்பூசணியைக் குறியீடாக பயன்படுத்துவதற்கு ஒரு வரலாறும் உண்டு. 1967 போரின்போது பாலஸ்தீன கொடி காட்சிப்படுத்தப்படுவதை இஸ்ரேல் ஒடுக்கியது. 1980-ல் மூன்று ஓவியர்கள் அரசியல் ஓவியத்தைக் காட்சிப்படுத்தினர். அதில் பாலஸ்தீன கொடியின் நிறங்கள் இருந்ததால் காட்சி முடக்கப்பட்டது.

அந்த நிறங்கள் அவர்கள் வரைந்திருந்த தர்பூசணியில் இருந்ததைக் குறிப்பிட்டு அதிகாரி அவர்களுக்கு எதிராக அறிக்கை அனுப்பினார். 

அதன் பின்னர், மக்கள் பொது இடங்களில் போராடும்போது தர்பூசணியை குறியீடாக பயன்படுத்தத் தொடங்கினர். தர்பூசணி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட நடவடிக்கைகள் கூட இருந்ததாக தெரிகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்| AP
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்| AP

எதிர்ப்பு

தேசியவாதம் தாண்டி எதிர்ப்பு மனநிலையை இது காட்டுவதாக மத்திய கிழக்கு விவாகரத்தில் நிபுணரான மேசெளன் சுகரியா தெரிவிக்கிறார்.

மெட்டா குழுமத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் போர் குறித்த செய்திகள் வடிகட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர்களின் முகப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குறிப்பு இடம்பெற்றால் அதனை பயங்கராவதம் எனத் திரிப்பதாக குற்றம்சாட்டு எழுந்தது. இதற்கு மன்னிப்பு கேட்டது இன்ஸ்டாகிராம்.

தர்பூசணி மட்டுமில்லாமல் சாவிகள், ஸ்பூன்கள், ஆலிவ், புறாக்கள், பாப்பி மலர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் கைக்குட்டைகள் ஆகியவையும் குறியீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com