இந்தத் தாக்குதல் அவர்களைத் தடுத்து நிறுத்தியதா? : ஜோ பைடன் கேள்வி

இஸ்ரேல்- ஹமாஸ் போர் எல்லைகள் தாண்டி விரிவடைவதை இந்தத் தாக்குதல்கள் உறுதி செய்கின்றனவா?
ஜோ பைடன் | AP
ஜோ பைடன் | AP

யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் 5-வது சுற்றுத் தாக்குதலை வியாழக்கிழமை நடத்தியது.

செங்கடல் பகுதியில் ஹவுதிகள் நடத்திவரும் கப்பல்கள் மீதான் தாக்குத்லை நிறுத்த அமெரிக்கா, யேமனில் தாக்குதல் நடத்தியதை ஜோ பைடன் உறுதி செய்துள்ளார்.

சமீபத்திய தாக்குதல் ஹவுதிகளின் இரண்டு கப்பல் தாக்கும் ஏவுகணைகளைத் தகர்த்துள்ளது. தெற்கு செங்கடலில் தாக்க முயற்சித்த போது அவற்றை தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் ராணுவ கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரை அவர்கள் மீதான தங்களின் தாக்குதல்களும் தொடரும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் | AP
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் | AP

ஜோ பைடன், “இந்தத் தாக்குதல் வேலை செய்ததா, ஹவுதிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனரா, இல்லை. எனில் அவர்கள் (ராணுவம்) தாக்குதலைத் தொடர்வர்களா எனக் கேட்டால், ஆம்” எனச் செய்தியாளர்களிடம் பேசும்போது ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளபதி யாஹ்யா சாரி வெளியிட்ட ஒலிக்குறிப்பில், மார்ஷெல் தீவுகளின் கொடி தாங்கிய அமெரிக்காவுக்குச் சொந்தமான சரக்கு கப்பல்மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவ கட்டுபாட்டகம் அந்தத் தாக்குதல் கப்பலைப் பாதிக்கவில்லை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கப்பலுக்கு அருகில் அது வெடித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் போர், எல்லைகள் தாண்டி விரிவடைவதை இந்தத் தொடர்தாக்குதல்கள் உறுதி செய்கிறதா என்கிற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com