இரட்டைச் சகோதரிகளை சேர்த்து வைத்த டிக்டாக்!

ஜார்ஜியாவில் பிறந்தவுடன் இருவேறு குடும்பங்களுக்கு விற்கப்பட்ட இரட்டைச் சகோதரிகள், 19 ஆண்டுகளுக்குப் பின்னர் டிக்டாக் செயலி மூலம் இணைந்துள்ளனர். 
இரட்டைச் சகோதரிகளை சேர்த்து வைத்த டிக்டாக்!
Published on
Updated on
1 min read

ஜார்ஜியாவில் பிறந்தவுடன் இருவேறு குடும்பங்களுக்கு விற்கப்பட்ட இரட்டைச் சகோதரிகள் 19 வருடங்களுக்குப் பின்னர் தனது இரட்டைச் சகோதரியுடன் இணைந்துள்ளனர். 

தனித்தனி குடும்பங்களில் வளர்ந்துவந்த ஏமி, மற்றும் ஆனோ தாங்கள் இரட்டையர்கள் என்பது தெரியாமலேயே இத்தனை ஆண்டுகள் கடந்துள்ளனர். ஆச்சரியப்படும் விதமான, தொலைக்காட்சியில் 'ஜார்ஜியா காட் டேலன்ட்(Georgia got talent) எனும் நிகழ்ச்சியில் தன்னைபோலவே இருக்கும் ஒரு சிறுமி வேறு பெயரில் நடனமாடுவதை ஏமி பார்த்துள்ளார். 

அவரது குடும்பத்தினர்களும் இதுகுறித்து இவர்களிடம் கேட்க, ஏமியின் வளர்ப்புத்தாய், 'உலகில் ஒரே மாதிரியாக தோற்றமளிக்கும் பலர் இருப்பார்கள்' எனக் கூறி சமாளித்துள்ளார். 

அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆனோ-வின் நண்பர்கள் அவருக்கு  இணையத்தில் வைரலாகி வந்த காணொலி ஒன்றில் அவரைப் போன்ற பெண் இருப்பதாகக் கூறியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து ஏமியும், ஆனோவும் ஜார்ஜியா தலைநகரான த்பிலிசியில் சந்தித்துக்கொண்டனர். முதலில் இருவரும் சகோதரிகள் என்பதைத் தெரிந்துகொள்ளாத இருவரும், தங்களின் பெற்றோர் இருவரையும் தத்தெடுத்து வளர்த்ததை பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின்னர் தாங்கள் பிறந்த மருத்துவமனையைக் கண்டறிந்து தங்களது தாய் கோமாவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்களது தாய் பிரசவத்திற்குப் பிறகு கோமாவிற்கு சென்றுவிட்டதாகக் கண்டறிந்தனர். பிறந்தவுடன் அவர்களது தந்தை இவர்களை விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டுகளில் குழந்தைகளைக் கடத்தி விற்கும் குற்றங்கள் ஜார்ஜியாவில் பரவலாக நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் பல உள்ளன. 2022ஆம் ஆண்டில் ஜாரிஜியா அரசு இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணையைத் துவங்கியது. ஆனால் இவையணைத்தும் பழைய வழக்குகள் என்பதால் உரிய தரவுகள் எதுவும் இல்லை என அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com