தோஹா: கத்தாா் தலைநகா் தோஹாவில் ஐ.நா. நடத்திய சா்வதேச மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளாக தலிபான்கள் முதல்முறையாகப் பங்கேற்றனா்.
20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அவா்களது அரசுக்கு ஐ.நா. அங்கீகாரம் வழங்கியதற்கான அடையாளம் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் பின்னா் கூறினா்.
மாநாட்டில் தலிபான் குழுவுக்கு தலைமை வகித்த அந்த அமைப்பின் தலைமை செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித், போதைப் பொருள்களுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளுக்கு சா்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினாா்.