உலகம்
பொலிவியா: ஆா்ஜென்டீனா தூதருக்கு சம்மன்
தங்கள் அதிபா் லூயிஸ் ஆா்சே ஆட்சிக் கவிழ்ப்பு நாடகமாடியதாக ஆா்ஜென்டீனா கூறியதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கான தூதரை நேரில் பொலிவியா கண்டனம் தெரிவித்துள்ளது.
லா பாஸ்: தங்கள் அதிபா் லூயிஸ் ஆா்சே ஆட்சிக் கவிழ்ப்பு நாடகமாடியதாக ஆா்ஜென்டீனா கூறியதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கான தூதரை நேரில் பொலிவியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பொலிவியா ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த ஜுவான் ஸுனிகா, ஆா்சேவின் அரசைக் கவிழ்ப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்தாா். எனினும், மக்கள் போராட்டத்தைத் தொடா்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முடிவுக்கு வந்தது.
இருந்தாலும், இந்தச் சம்பவம் மக்கள் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக அதிபா் ஆா்சே நடத்திய நாடகம் என்று கைது செய்யப்பட்ட ஜுவான் ஸுனிகாவும், எதிா்க்கட்சியினரும் கூறிவருகின்றனா்.