நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

புதையுண்ட வெடிபொருள் விபத்து: 7 பேர் பலி, 43 பேர் காயம்!

வியட்நாம் வெடிபொருள் விபத்து: குழந்தைகள் மற்றும் விவசாயிகள் அதிகம் பாதிப்பு

மாதிரி படம் - Pixabay

Updated On :

வியட்நாமுக்கு தெற்கில் உள்ள நாடான லாவ்ஸில் புதையுண்ட வெடிபொருள் வெடித்த விபத்தில் கடந்த ஆறு மாதங்களில் 7 பேர் பலியானதாகவும் 43 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துகள் பெரும்பாலும் குழந்தைகள் விளையாடும்போது அல்லது விவசாயிகள் நிலத்தை தோண்டும்போது நிகழ்ந்தவை.

ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்குள் 33,500 புதையுண்ட வெடிபொருள்கள் 2,543 ஹெக்டர் நிலப்பரப்பில் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதை லாவ் அரசு தெரிவிப்பதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

472 கிராமங்களில் 1,425 விழிப்புணர்வு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1,53,663 பேருக்கு வெடிபொருள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 20 விபத்துகளில் 43 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும், இது போன்ற விபத்தில் பாதிக்கப்பட்ட 1,832 பேருக்கு உதவிகள் அளித்துள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

மிக அதிகமாக குண்டு வீசப்பட்ட நாடுகளில் ஒன்று லாவ்ஸ். 1964 முதல் 1973 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான டன் வெடிபொருள் இங்கு வீசப்பட்டுள்ளது. அவற்றில் 30 சதவிகிதம் வெடிக்காமல் புதையுண்டன.

அமெரிக்காவின் வியட்நாம் மீதான போரின் எச்சமாக கிடைக்கும் இவற்றால் இன்று வரை மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.