
கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள விமான பொறியியல் பணியகத்தில் வாயு கசிவு ஏற்பட்டத்தில் 39 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் முனையத்தில் இருந்து தனித்திருக்கும் விமான பொறியியல் பணியகத்தில் அங்கு பணிபுரிந்த வெவ்வேறு நிறுவனங்களை சார்ந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாயு கசிவால் ஊழியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்களில் 14 பேர் விமான நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ம பெட்ரோலிய வாயுவில் சேர்க்கப்படும் மெத்தில் மெர்காப்டன் என்கிற வாயு, உபயோகிக்கப்படாத கலனிலிருந்து கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.