கிரீஸ் அரசுக்கு எதிராகக் கிளம்பும் தொழிலாளர் அமைப்புகள்!

வாரத்தில் ஆறு நாள்கள் வேலைசெய்யும் சட்டத்தினை கிரீஸ் அரசு அமல்படுத்தியது
கிரீஸ் அரசுக்கு எதிராகக் கிளம்பும் தொழிலாளர் அமைப்புகள்!
Published on
Updated on
1 min read

வாரத்தில் ஆறுநாள் வேலைசெய்வதை அமல்படுத்தியதற்கு கிரீஸ் நாட்டு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள கிரீஸ் அரசு, வாரத்தில் ஆறுநாள் வேலைசெய்யும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிரீஸ் அரசு தெரிவிக்கிறது.

ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின் மூலம், ஊழியர்கள் வாரத்தில் 40 மணி நேரத்திற்கு பதிலாக, 48 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இதன்மூலம், இந்த சட்டமானது, 24 மணிநேரங்களும் செயல்படும் வணிக நிறுவனங்கள் மற்றும் விருப்பப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதன் அடிப்படையில், தொழிலாளர்களின் ஊதியத்தில் 40 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது. பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் கிரேக்க ஊழியர்கள் சராசரியாக 1,886 மணிநேரம் வேலை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க நாடுகளின் சராசரியான 1,811ஐ விடவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சராசரியான 1,571 ஐ விட அதிகமாகும்.

கிரீஸின் அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு நாட்டு அரசியல் பிரமுகர்களும், கிரீஸ் நாட்டு மக்களும் தொழிலாளார்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர்கள் கூறுவதாவது, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஆறுநாள் வேலைத்திட்டம் காட்டுமிராண்டித் தனமானது. கிரேக்கர்கள் தற்போதே மிக நீண்டநேரம் வேலை செய்கிறார்கள்; வாரத்திற்கு சராசரியாக 41 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இது மற்ற நாட்டினரைவிட அதிகமானதாகும்.

ஆனால், இப்போது ஆறு நாள்கள் வேலைத்திட்டமும் திணிக்கப்படுகிறது. மற்ற நாடுகள் நான்கு நாள்கள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த முனையும்போது, கிரீஸ் மட்டும் தலைகீழாக செயல்படுகிறது. இந்த சட்டம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

அதிக நேரம் என்பது, முதலாளிகள் அதிக ஊழியர்களை பணியமர்த்துவதைத் தடுக்க உதவுகிறது. ``போய் நீண்ட நேரம் வேலை செய்யுங்கள், நீங்கள் ஓய்வூதியதாரராக இருந்தாலும் நாங்கள் கண்மூடித்தனமாகத் தான் இருப்போம்" என்று கிரீஸ் அரசு தெரிவிப்பதாகக் கருதுகின்றனர். இந்தத் திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு நியாயமற்றது என்று தெரிவிக்கின்றனர்.

இந்த சட்டம் குறித்து, அயர்லாந்தின் மேனூத் பல்கலைக்கழகத்தின் ஐரோப்பிய ஒன்றிய சட்டப் பேராசிரியர் ஜான் ஓ 'பிரென்னன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

கிரீஸ் அரசு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஆறுநாள் வேலைத்திட்டத்திற்கான சட்டத்தை அமல்படுத்தியிருந்தாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

கிரீஸ் அரசுக்கு எதிராகக் கிளம்பும் தொழிலாளர் அமைப்புகள்!
கிரீஸில் வாரத்தில் 6 நாள்கள் வேலை! உழைப்பு மிகவும் முக்கியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com