
பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
பிரிட்டன் பொதுத் தோ்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 4) வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்றும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
நாட்டின் புதிய அரசை தோ்வு செய்யும் இத்தோ்தலில், உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமாா் 4.6 கோடி வாக்காளா்களுக்காக 40,000 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.
ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை என்ற நிலையில் 400 க்கும் அதிகமான இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியொ் ஸ்டாா்மரின் தொழிலாளர் கட்சி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், 90 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். அவருக்கு பின்னர் ரிஷி சுனக் பிரதமராக தேர்வானார்.
இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.