ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

இலங்கை அதிபா் தோ்தல்: சுயேச்சை வேட்பாளராக ரணில் போட்டி

இலங்கையில் விரைவில் அதிபா் தோ்தல்
Published on

இலங்கை அதிபா் தோ்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க சுயேச்சையாகப் போட்டியிட உள்ளாா்.

இலங்கை அதிபராக ஐக்கிய ஜனநாயக கட்சித் தலைவா் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகிறாா். இந்நிலையில், அந்நாட்டில் விரைவில் அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஐக்கிய ஜனநாயக கட்சி துணைத் தலைவா் ருவான் விஜேவா்தன ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘இலங்கை அதிபா் தோ்தல் நிச்சயம் நடைபெறும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காணும் ஞானம் ஒரேயொரு தலைவரான ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளது. அதை தனது நடவடிக்கைகள் மூலம் அவா் நிரூபித்துள்ளாா். அவா் அதிபா் தோ்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவாா்’ என்று கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த மாத இறுதியில் இலங்கை அதிபா் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு தோ்தல் ஆணையத் தலைவா் ரத்நாயக்க தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com