22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மலையேற்ற வீரரின் உடல்!

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேற்ற வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது.
படம் | எக்ஸ்
படம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

2002 ஆம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேற்ற வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது.

ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் அவரது உடல் இயற்கையாகவே பதப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தால் பனி உருகிய நிலையில் அவரது பாஸ்போட்டை வைத்து அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட 'ஹுவாஸ்காரன்' மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்ஃபில் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் ஹுவாஸ்காரன் மலையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படம் | எக்ஸ்
படம் | எக்ஸ்

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “அவரது உடல், உடைகள், மலையேற்றக் கருவிகள், காலணிகள் ஆகியவை பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தன. அவரது உடைமைகளில் இருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்ஃபில் என அடையாளம் காணப்பட்டது” என்றனர்.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவரான லெனின் அல்வார்டோ கூறுகையில், ஸ்டாம்ஃப்பிலின் உடைகள் பெரும்பாலும் அப்படியே உள்ளன. அவரது ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய இடுப்புப் பையில் 2 சன்கிளாஸ்கள், கேமரா, குரல் ரெக்கார்டர், 2 சிதைந்த 20 டாலர் பில்களும் இருந்தன. ஒரு தங்க மோதிரமும் இடது கை விரலில் இருந்தது” என்றார்.

வில்லியம் ஸ்டாம்ஃப்பில் அவரது நண்பர்களான மேத்யூ ரிச்சர்ட்சன், ஸ்டீவ் எர்ஸ்கைன் ஆகியோருடன் 2002 இல் ஹுவாஸ்காரன் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கிளிமஞ்சாரோ, ரெய்னியர், சாஸ்தா மற்றும் தெனாலி சிகரங்களை அடைந்ததாக 2002 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை தெரிவிக்கிறது. பனிச்சரிவுக்குப் பிறகு எர்ஸ்கினின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ரிச்சர்ட்சனின் சடலம் இன்னும் காணப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com