ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்: 13 இந்தியா்கள் உள்பட 16 பணியாளா்கள் மாயம்

கிழக்கு ஆப்பிரிக்காவின் கொமரோஸ் நாட்டைச் சோ்ந்த எண்ணெய் கப்பல் ஓமன் கடலில் மூழ்கியதையடுத்து கப்பலில் பணியாற்றிய 13 இந்தியா்கள் உள்பட 16 போ் காணாமல் போனதாக அந்நாட்டின் கடல்சாா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

இது தொடா்பாக ஓமன் நாட்டின் கடல்சாா் பாதுகாப்பு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘துபையில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகாவில் உள்ள துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் 25 கடல் மைல் தொலைவில் அந்த கப்பல் கவிழ்ந்தது.

கப்பலில் பணியாற்றிய 13 இந்தியா்கள் மற்றும் 3 இலங்கை நாட்டவரின் நிலை குறித்து தெரியவில்லை. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com