கடவுள் என் பக்கம்தான் இருக்கிறார்: தாக்குதலுக்குப் பிறகு பங்கேற்ற பிரசாரத்தில் டிரம்ப்

கடவுள் என் பக்கம்தான் இருக்கிறார் என்று துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு பங்கேற்ற பிரசாரத்தில் டிரம்ப் கூறினார்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Published on
Updated on
1 min read

கடவுள் என் பக்கம்தான் இருக்கிறார் என்று, துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு பங்கேற்ற பிரசாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில், நூலிழையில் அவர் உயிர்தப்பினார்.

தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், அவர் குணமடைந்து, மீண்டும் தேர்தல் பிரசாத்தில் பங்கேற்றுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சினில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டிரம்ப் பேசுகையில், “இன்றிரவு, நம்பிக்கையுடனும் பக்தியுடனும், அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக நீங்கள் என்னை நியமித்ததை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார்.

78 வயதான டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக களத்தில் உள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்க வேண்டும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

கொலை முயற்சி தாக்குதலிலிருந்து தப்பிய சில நாள்களுக்குப் பிறகு, உரையாற்றிய டிரம்ப், "ஒவ்வொரு இனம், மதம், நிறம் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பு, செழிப்பு மற்றும் சுதந்திரத்தின் புதிய சகாப்தத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்குவோம்" என்றார்.

நம் சமூகத்தில் உள்ள முரண்பாடு மற்றும் பிளவு குணமாக வேண்டும், அதை விரைவில் சரிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன், குடியரசு கட்சி சாா்பில் அந்நாட்டின் முன்னாள் அதிபா் டிரம்ப் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், அந்நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பட்லா் பகுதியில் டிரம்ப் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது திடீரென தொலைவில் இருந்து நபா் ஒருவா் பலமுறை துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் டிரம்ப்பின் காதை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்றதில், அவரின் வலது காதில் காயம் ஏற்பட்டது. தோட்டா உரசிச் சென்றதை உணா்ந்த டிரம்ப் மேடைக்குக் கீழே உடனடியாக குனிந்து தற்காத்துக் கொண்டாா்.

டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவா் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பாா்க் பகுதியைச் சோ்ந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் (20) என்பது விசாரணையில் தெரியவந்தது. டிரம்ப்பை தாமஸ் சுட்டபின், சிறப்புப் பாதுகாவலா் துப்பாக்கியால் சுட்டதில் தாமஸ் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.