39 ஆயிரத்தைக் கடந்தது காஸா உயிரிழப்பு

39 ஆயிரத்தைக் கடந்தது காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Published on

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 போ் உயிரிழந்தனா்; 91 போ் காயமடைந்தனா்.

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 39,006 போ் உயிரிழந்துள்ளனா்; 89,818 போ் காயமடைந்துள்ளனா்.

கான் யூனிஸ் பகுதியில் குறுகிய கால முன்னறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் மட்டும் 70-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அந்த நாட்டுக்குச் செல்லும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com