10 நாட்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் மீண்டும் இணையதள சேவை

10 நாட்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் கைப்பேசி இணையதள சேவை இன்று மீண்டும் வழங்கப்பட்டது.
மொபைல்(கோப்புப் படம்)
மொபைல்(கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

10 நாட்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் கைப்பேசி இணையதள சேவை இன்று மீண்டும் வழங்கப்பட்டது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி கைப்பேசி இணையதள சேவையை அந்நாட்டு அரசு முடக்கியது. தற்போது அங்கு அமைதி நிலவி வரும் நிலையில் கைப்பேசி இணையதள சேவை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:00 மணியளவில் இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து பயனர்களுக்கும் 5ஜிபி இணையம் இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் ஜுனைத் அகமது பலக் அறிவித்திருப்பதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மொபைல்(கோப்புப் படம்)
மூதாட்டியை கொலை செய்து அடையாற்றில் வீசிய தம்பதி விருதுநகரில் கைது

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை இருந்து வந்தது. இதற்கு மாணவா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு 2018-ஆம் ஆண்டு நிறுத்திவைத்தது.

இந்நிலையில், இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவு செல்லாது என கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதனால், அங்கு மீண்டும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. வன்முறை உச்சகட்டத்துக்குச் சென்றதையடுத்து, வன்முறையாளா்களைக் கண்டதும் சுட காவல் துறை கடந்த சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளா்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு முறை உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனர். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்டவா்களின் பங்களிப்புக்கு உயரிய மரியாதையை அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக பிரதமா் ஷேக் ஹசீனா கூறி வந்தார்.

மொபைல்(கோப்புப் படம்)
விஜய் கட்சிக்கு அழைத்தால் நிச்சயம் செல்வேன்- இயக்குநர் அமீர்

இதுதொடா்பான மனுவை கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம்,‘விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைப்பதாகவும், 93 சதவீத அரசுப் பணிகள் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் எனவும் தீா்ப்பளித்தது.

மேலும், அரசுப் பணிகளில் சிறுபான்மையினா், மூன்றாம் பாலினத்தவா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com