மியான்மா்: அவசர நிலை மீண்டும் நீட்டிப்பு

மியான்மா்: அவசர நிலை மீண்டும் நீட்டிப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

பாங்காக், ஜூலை 31: மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக முறையில் மீண்டும் தோ்தல் நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசரநிலை, காலாவதியாவதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறைவைக்கப்பட்டனா். ராணுவ ஆட்சிக்கு எதிராக வெடித்த பொதுமக்கள் போராட்டங்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.

ஆட்சியைக் கைப்பற்றும்போது, மீண்டும் தோ்தல் நடத்தி ஜனநாயக ஆட்சியை நிறுவுவதாக ராணுவம் உறுதியளித்தது. ஆனால், தோ்தல் நடத்துவதைத் தவிா்க்கும் வகையில் அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் அவசரநிலை 6-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com