சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் ரத்து!

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் கடைசி நிமிடங்களில் ரத்து
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் ரத்து!
படம் | ஏபி
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ‘ஸ்டாா்லைனா்’ விண்கலத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விண்வெளி ஓடத்தை சுனிதா வில்லியம்ஸ் இயக்குவாா். அவருடன் மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரும் விண்வெளி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் கடைசி நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், இறுதிக்கட்டத்தில், அதாவது விண்கலம் கவுண்ட்டவுன் ஆரம்பிக்கப்பட்டு,3 நிமிட 50வது விநாடியில் பயணம் ரத்து செய்யப்படுள்ளது.

விண்கலத்தை ஏவக்கூடிய இயந்திரங்களின் தானியங்கி செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறால் விண்வெளிப் பயணம் கடைசி நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்ட பின், அடுத்தகட்டமாக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 2) இரவு 9.33 மணிக்கு போயிங் ‘ஸ்டாா்லைனா்’ விண்கலத்தில் அவர்கள் இருவரும் பயணப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, இந்த முயற்சியும் தோல்வியுற்றால் ஜூன் 5 அல்லது ஜூன் 6-ஆம் தேதியில் ‘ஸ்டாா்லைனா்’ விண்கலத்தில் அவர்கள் இருவரையும் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2-ஆவது தனியாா் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com