குவைத் கட்டடத்தில் தீவிபத்து! 10 இந்தியர்கள் உள்பட 43 பேர் பலி! தமிழர்கள் நிலை என்ன?

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
தீபிடித்த கட்டடம்
தீபிடித்த கட்டடம்AFP
Published on
Updated on
1 min read

குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 43 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.

புதன்கிழமை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் பற்றிய தீ சடசடவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இந்தக் கட்டடத்தில் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் தமிழர்களும் உண்டா, தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.

கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் கேஜி ஆபிரஹாமுக்குச் சொந்தமான கட்டடமென ஆன்மனோராமா தெரிவித்துள்ளது. அவரின் என்பிடிசி நிறுவன சூப்பர் மார்கெட் ஊழியர்களும் இந்தக் கட்டடத்தில் தங்கியுள்ளனர்.

மேலும் 40 பேர் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவ்ம் தடயவியல் நிபுணர்கள் தீயில் எரிந்த பகுதிகளில் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட குவைத் துணை பிரதமர் பஹத் யூசுப் அல்-சபா இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கட்டட உடைமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com