
உக்ரைனுக்கு ஏவுகணைகள், கையெறிக் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கனடா அனுப்பவுள்ளதாக கனடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
2000-க்கும் அதிகமான ஏவுகணைகள், 29 ஜெர்மனிய ரிமோட் கட்டுப்பாட்டு ஆயுத வாகன அமைப்புகள், 1,30,000 சிறிய கையெறி குண்டுகள் ஆகியவற்றை கனடா உக்ரைனுக்கு அனுப்பவுள்ளது.
மேலும் 50 ஆயுதம் ஏந்திய வாகனங்கள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், முதல் நான்கு வாகனங்கள் இந்த வாரம் கனடாவிலிருந்து அனுப்பப்படும் எனவும் அடுத்த வாரங்களில் அவை உக்ரைனுக்குக் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 2022-ல் ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியது. மூன்று ஆண்டுகளாக போர் தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.