கோப்புப் படம்.
கோப்புப் படம்.

வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி!

சௌதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணத்தில் 19 பேர் பலி
Published on

சௌதி அரேபியாவில் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணிகள் 19 பேர் பலியாகியுள்ளனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனித யாத்திரை வெள்ளிக்கிழமை(ஜூன் 14) தொடங்கியது. இதற்காக 15 லட்சம் பக்தர்கள் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் திரண்டுள்ளனர்.

ஹஜ் யாத்திரை மூலம், இந்த ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சௌதி அரேபியாவில் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணிகள் 19 பேர் பலியாகியுள்ளனர். அதன்படி ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

எனவே, பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com