தெற்கு சீனாவைப் புரட்டிப்போட்ட கனமழை: 9 பேர் பலி!

சீனாவில் ஒருபக்கம் கனமழை வெள்ளம், மற்றொரு பக்கம் கடும் வறட்சி...
தெற்கு சீனாவில் கனமழை
தெற்கு சீனாவில் கனமழைAP
Published on
Updated on
2 min read

தெற்கு சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் புஜியான் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதோடு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 372.4 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இதனால் நான்பிங், சான்மிங் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

Southern China
Southern China

கனமழைக்கு இதுவரை 378 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 880 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகின. சுமார் 415 மில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன.

Southern China
Southern China

தென் குவாங்டாங் மாகாணத்தில் ஹாங்காங்கின் எல்லையில் கடுமையான வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடலோர பகுதிகளான ஹூபிங் மற்றும் புஜன் மாகாணத்தில் மட்டும் 4 பேர் கொல்லப்பட்டனர். மீஜோ நகரில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Southern China
Southern China

மிசோவில் உள்ள 1,30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.

northern china
northern china

தென்சீனாவின் பெர்ல் நதிப்படுகையில் உள்ள ஹன்ஜியாங் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த மாதம், சீனா முழுவதும் 17 மாகாணங்களில் வெள்ளம் தொடர்பான பேரழிவுகளில் பலர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயுள்ளனர் என்று அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

northern china
northern china

இதற்கிடையில், நாட்டின் வடக்கு சீனாவில் கடும் வறட்சியுடன் மக்கள் போராடி வருகின்றனர். நாடு இரண்டு காலநிலையை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com