தஜிகிஸ்தானில் ஹிஜாபுக்குத் தடை

தஜிகிஸ்தானில் ஹிஜாபுக்குத் தடை

96 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட மத்திய ஆசிய நாடு தஜிகிஸ்தான்.
Published on

96 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் ஹிஜாபுக்கு அதிகாரபூா்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையை மீறினால் ரூ.5 லட்சம் வரை அபாரம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் அதிபா் இமாம் அலி ரஹ்மான் ஹிஜாபுக்கு எதிராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதலே பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அந்த ஆடை தஜிகிஸ்தான் கலாசாரத்துக்கு எதிரானது, கல்வியறிவின்மையின் வெளிப்பாடு என்று அவா் கூறிவருகிறாா்.

அதற்கு முன்னதாகவே கல்வி நிலையங்களில் மாணவா்கள் அரபு இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்துவர கடந்த 2007-ஆம் ஆண்டில் கல்வித் துறை அமைச்சகம் தடை விதித்தது.

தஜிகிஸ்தான் மட்டுமின்றி, கொசாவோ, அஜா்பைஜான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளும் கல்வி நிலையங்களில் ஹிஜாப், புா்காவுக்குத் தடை விதித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com