பிரிட்டனில் ‘விடுதலைப் புலிகள்’ தடை நீட்டிப்பு: இலங்கை வரவேற்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தை (எல்டிடிஇ) நீட்டிக்கும் முடிவை வரவேற்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் அலி சாப்ரி தெரிவித்தாா்.
அலி சாப்ரி
அலி சாப்ரி
Updated on

பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை (எல்டிடிஇ) நீட்டிக்கும் முடிவை வரவேற்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் அலி சாப்ரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘வெளிநாட்டு அரசுகளின் உதவியோடு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து தங்களை நீக்கிக்கொள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சித்தது. இதன்மூலம் இலங்கையில் இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய விடுதலைப் புலிகள் நினைத்தது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அந்த இயக்கத்தை பிரிட்டன் அரசு நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அவா்களின் முயற்சிகள் அனைத்தும் தகா்க்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டாா்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் நாடாக இலங்கை தடை செய்தது. நாா்வே அமைதி ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்காக அந்தத் தடையை கடந்த 2002-ஆம் ஆண்டு இலங்கை அரசு விலக்கிக்கொண்டது. பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் மோதல் நீடித்ததால் மீண்டும் 2008-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது. இதையடுத்து, தமிழா்களுக்கு தனிநாடு கோரி உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த அந்த இயக்கத்தை கடந்த 2009, மே மாதத்தில் இலங்கை ராணுவம் வீழ்த்தியது.

தற்போது இலங்கை, இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com