
ஹமாஸுக்கு பதிலீடாக காஸாவின் ஆளுகைக்கு விரைவான திட்டத்தை உருவாக்கவுள்ளதாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்புச் செயலர் தாச்சி ஹனேக்பி தெரிவித்துள்ளார்.
ரெய்மேன் பல்கலைக்கழகத்தில் பேசியவர், ஹமாஸின் ராணுவ திறன் தோல்வியடைந்தது காஸாவில் ஹமாஸுக்கு பதிலாக உள்ளூர் தலைமைத்துவத்துடன் அரசு அமைவதை நாடுகள் காண வாய்ப்பளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் இணக்கத்திலுள்ள மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்போடு காஸாவின் புதிய தலைமைத்துவம் அமையும் என அவர் விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில் காஸாவில் ஹமாஸின் இருப்பை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமெரிக்கா உடனும் ராணுவ தளபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர் ஹமாஸ் முற்றிலும் மறைவதற்கு காலம் எடுக்கும் எனவும் ஹமாஸ் என்பது ஒரு கருத்து எனப் புரிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அது முடிவுறுவதற்கு காலம் எடுக்கும். அதுவரை காத்திருக்காமல் கீழிலிருந்து மேலாக மட்டுமில்லாமல் மேலிருந்து கீழாகவும் படிநிலை கொண்ட தலைமைத்துவத்தை கொண்டுவர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போருக்கு பிறகான காஸாவில் இஸ்ரேலின் ஆளுகையை அமெரிக்கா கண்டித்துள்ளது. அது போரினால் சிதைந்த காஸாவில் மேலும் மோசமான சிக்கல்களை உருவாக்கும் என ஜோ பைடன் நிர்வாகம் கருதுகிறது.
இஸ்ரேலின் நோக்கம் என்பது ஹமாஸ் ராணுவம் மற்றும் அரசினை அழிப்பது, பிணைக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காஸா இஸ்ரேலுக்கான ஆபத்தாக தொடராமல் இருப்பது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேர்காணலில் தெரிவித்தார். காஸாவில் அரபு நாடுகளின் வழிகாட்டுதலில் உள்ளூர் அரசு அமைக்கப்படும் என்பதை நெதன்யாகு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.